பணையக் கைதி விடுவிப்பு ஹமாஸ் அறிவிப்பு '
ஹமாஸ் வசம் பணையக் கைதி யாக உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த எடன் அலெக்சாண்டரை விடு விக்க ஹமாஸ் அமைப்பு முடிவெடுத்துள் ளது. காசாவில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும், பாலஸ்தீனர்களுக்கான ஐ.நா. நிவாரணப் பொருட்களை தடுத்து வைக்காமல் காசாவிற்குள் கொண்டு செல்லவும் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் இம்முறை ஹமாஸ் அமைப்பு முழு தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. உதவியுடன் வீடு கொடுத்த தாலிபன் அரசு
கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மொத்தம் 1,000 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. ஐ.நா அகதிகளுக்கான (UNHCR) அமைப்பின் 78 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் மட்டுமின்றி மருத்துவமனை, மதப் பள்ளி ஆகியவையும் கட்டிக்கொடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோவில் கனமழை வெள்ளம் 100க்கும் மேற்பட்டோர் பலி
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத் தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். மேலும் 50 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர். காணா மல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. வெள்ளப்பெருக்கின் காரணமாக மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.