அர்ஜெண்டினாவில் பொது வேலைநிறுத்தம் முதற்கட்ட வெற்றி சட்டத்தின் ஒரு பகுதியில் மட்டும் திருத்தம்
பியூனஸ் அயர்ஸ், பிப்.21- அர்ஜெண்டினா அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோதச் சட்டத்தின் ஒரு பகுதி அந்நாட்டு தொ ழிற்சங்கங்கள் நடத்திய போராட் டத்தின் விளைவாக திருத்தப்பட்டுள் ளது. இந்நிலையில் இது தொழிலா ளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவாளரும் டிரம்ப் பின் அடி வருடியுமான ஜேவியர் மிலெய் 2023 இல் அர்ஜெண்டினா ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத, தொழிலாளர்களுக்கு எதிரான நடவ டிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இவர் “தொழிலாளர் நவீனமய மாக்கல் சட்டம்” (Labor Moderni zation Law) என்ற பெயரில் தொழிலா ளர்களுக்கு விரோதமான சட்ட மசோதாவை கொண்டு வந்தார். இந்த புதிய மசோதாவானது, தொழிலா ளர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைப் பறிக்கிறது. பணிநீக்க காலத்தில் தொழிலாளர்களுக்கு நிறு வனங்கள் கட்டாயம் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை குறைக்கிறது. தொழிலாளர்கள் செய் யும் வேலைக்கு பணத்தை ஊதியமாக வழங்குவதற்குப் பதிலாகப் பொருட் கள் அல்லது சேவைகளாக வழங்க அனுமதிக்கிறது. மிக குறிப்பாக வேலை நேரத்தை 12 மணிநேர மாக்குகிறது. கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் வழங்குவதற்குப் பதிலாக, அதற்கு ஈடாக விடுமுறை அளிக்கும் ‘நேர வங்கி’ (Hour banks) முறையை கொண்டு வருகிறது. அதேபோல தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் காலங்களில் எடுக்கும் மருத்துவ விடுப்பிற்கு வழங் கப்படும் ஊதியத்தை 100 சத வீதத்திலிருந்து 75 சதவீதம் அல்லது 50 சதவீதம் ஆகக் குறைக்கிறது. விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் காயங்கள் போன்ற பணி சாராத உடல்நலப் பிரச்சனைக ளுக்கும் இது பொருந்தும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த தொழிலாளர் விரோத மசோ தாவுக்கு எதிராக அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி கடந்த பிப்ரவரி 11 அன்று செனட் சபை இதற்கு ஒப்புதல் அளித்தது. பிறகு அந்நாட்டு கீழவையின் ஒப்புத லுக்காக அனுப்பிவைத்தது. பிப்.19 அன்று கீழவையில் வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் அன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக வியாழன் காலை முதல் ரயில்கள், சுரங்கப் பாதைப் போக்குவரத்து, பேருந்துகள் மற்றும் விமானங்கள் இயங்க வில்லை. தலைநகர் உள்ளிட்டு நாட்டின் பல முக்கிய நகரங்களில் மக்கள் திரண்டு பெரும் போராட்டத் தை நடத்தினர். தொழிலாளர்கள் நடத்திய பெரும் கூட்டுப்போராட்டத்தின் விளைவாக மருத்துவ விடுப்பின் போது ஊதி யத்தில் ஒரு பகுதியை பிடித்துக்கொள் ளும் முடிவை மசோதாவிலிருந்து நீக்கியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 115 வாக்குகளும் கீழவையில் பதி வானது. இது தொழிற்சங்கங்கள் நடத்திய கூட்டுப்போராட்டத்தின் முதற்கட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது. மசோதாவில் ஒரு பிரிவு நீக்கப்பட்டி ருப்பதால், திருத்தப்பட்ட மசோதாவை உறுதிப்படுத்த மீண்டும் செனட்டிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
