காசாவில் அத்தியாவசியப் பொருட்களின் தேவை மிக அதிகம்
காசாவில் அத்தியாவசியப் பொருட்களின் தேவை மிக அதிகமாக உள்ளது என ஐ.நா. மனிதாபிமான சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் அரசு சாரா மனிதாபிமான அமைப்புகள் காசா முழுவதும் பாலஸ்தீனர்களுக்கு உயிர்வாழத் தேவையான உணவு, குடிநீர் மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து வழங்கினாலும் தேவைகளை போதுமான அளவு பூர்த்தி செய்ய வேகமாகவும் உறுதியாகவும் நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் நடந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - ஜெலன்ஸ்கி
சவூதியில் நடைபெற்ற அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவையும், ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர்நிறுத்தம் தொடர்பாக சவூதியில் அமெரிக்க-ரஷ்ய அதிகாரிகள் செய்வாயன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு சில நாட்களுக்கு முன் அப்பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது. அந்த நிகழ்வு பற்றி எங்களுக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கூகுள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூகுள் நிறுவனம் டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்து தனது “மேப்” பில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றியுள்ளது. அமெரிக்க உத்தரவு அந்த நாட்டிற்கானது மட்டுமே, உலகளவில் சேவை வழங்கும் நீங்கள் எங்கள் நாட்டின் பெயரை மாற்ற முடியாது. இதனை மீண்டும் மெக்சிகோ என மாற்றாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஜூலை மாதம் பிரேசிலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு
பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பு நாடுக ளின் உச்சிமாநாடு ஜூலை 6 மற்றும் 7 அன்று பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மவுரோ வியேரா உறுதிப்படுத்தி யுள்ளார். அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் பணியில் பிரிக்ஸ் நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
வங்கதேசத்திற்கு திரும்பி வருவேன்: ஷேக் ஹசீனா அறிவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் வங்கதேசத்திற்குள் வருவேன் என தெரிவித்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையி லான இடைக்கால அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அவர் வங்கதேசம் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒவ் வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவுவேன், மக்களை படுகொலை செய்தவர்கள் வங்கதேச சட்டத் தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வேன். அதனால் தான் அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருக்கி றார் என பேசியுள்ளார்.