world

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரானியர்களை படுகொலை செய்தவர் டிரம்ப்

டெஹரான், ஜன.14- ஈரான் அரசை கவிழ்க்க டிரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் எங்கள் மக்களை படுகொலை செய்த வர் டிரம்ப் தான் என அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது ஈரான்.    அமெரிக்காவின் தடைகளால் ஈரானில் பொருளாதார நெருக்கடி மிகத் தீவிரமடைந்துள்ளது. வாழ்க் கைச் செலவுகளை எதிர்கொள்ள முடி யாமல் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள் என ஈரான் மக்க ளுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப், உங்க ளுக்கான உதவி வந்து கொண்டிருக்கி றது என்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தற்போது எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் உருவாகி யுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழுச் செயலாளர் அலி லாரிஜானி, டிரம்ப்புக்கு கடும் எதிர்ப் பைத் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களை படுகொலை செய்ததில் முதன்மையான நபர் டிரம்ப், இரண்டாவது நேதன்யாகு என அவர் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது அந்நாட்டில் 2,500 க்கும் அதிகமான நபர்கள் பலியாகியுள்ள தாகவும், 18,000 த்துக்கும் அதிக மான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் அமெக்க ஆதரவு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பொருளாதார ஏற்றத்தாழ்வே இளைஞர்களின் அடிப்படைக் கவலை

ஜெனீவா, ஜன.14- ஏழை, பணக்காரர்களுக்கு இடையே நிலவி வரும் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வே உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் அடிப்படைக் கவலையாக உள்ளது என்ற உண்மை வெளியாகியுள்ளது.  வேர்ல்டு எகனாமிக் ஃபோரம் யூத் பல்ஸ் 2026 அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வேகமாக மாறிவரும் பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை தற்போ தைய இளம் தலைமுறை எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதை ஆராய்ந்தது.  144 நாடுகளைச் சேர்ந்த 18-30 வய துக்குட்பட்ட சுமார் 4,600 இளைஞர்க ளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 48.2 சதவிகித இளைஞர்கள் ‘பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதே’ தங்கள் எதிர்காலத்தை பெரு மளவு பாதிக்கும் முக்கிய பொருளாதா ரப் பிரச்சனையாக உள்ளது என தெரி வித்துள்ளனர்.  57 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் தங்களின் மன அழுத்தம் அல்லது கவலைக்கு பொருளாதாரப் பிரச்சனைகளே முக்கியக் காரணம் என்று கூறி யுள்ளனர். அதாவது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிக ரித்து வரும் இடைவெளியே இளைஞர்க ளின் முதன்மையான பொருளாதாரக் கவலையாக உள்ளது என தெரிய வந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் வெறும் விமர்சனம் செய்வதோடு நின்றுவிடாமல், தாங்களே தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள்.  அதாவது இளைஞர்கள் அரசிய லில் ஆர்வம் காட்டவில்லை என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், 36 சதவிகிதமானவர்கள்  தாங்கள் தேர்த லில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 56 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் காலநிலை மாற்றம் உலகிற்கு உள்ள மிகப்பெரிய அச் சுறுத்தல் என அடையாளம் கண்டுள்ளனர். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் (57.2%), தரமான கல்வி (46.1%) மற்றும் மலிவு விலை வீட்டு வசதி (32.2%) ஆகியவை தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கிறது என இளைஞர்கள் கருதுகின்றனர்.  செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் ஆரம்பக்கட்ட பணிநிலை வேலைவாய்ப்புகளைக் குறைக்கிறது என மூன்றில் இரண்டு பங்கு இளை ஞர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 சதவிகித இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுக் கருவி களைப் பயன்படுத்துகின்றனர்.   இந்த ஆய்வின் முடிவுகள் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 19 முதல் 23 வரை நடை பெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன் தாய்லாந்தில் 29 பேர் பலி பேங்காக்,ஜன.14- தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது மிகப்பெரிய கிரேன் விழுந்த தில்  29 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.  அதிவேக ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டி ருந்த ராட்சத கிரேன் அவ்வழியாக 195 பயணிகளுடன் சென்ற ரயில் மீது  சரிந்து விழுந்துள்ளது. அப்போது ரயில் பெட்டிகள் தடம்புரண்டு தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந் துள்ளனர்.  30-க்கும் மேற்பட்டோர் காயங்களு டன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல் கட்டத் தகவல் வெளியானது. மேலும்பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் டாக்கா,ஜன.14- ஜனவரி 22 முதல் வங்கதேசத்தில் நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரம் துவங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தின் காரணமாக ஷேக் ஹசீனா தலை மையிலான அவாமி லீக் அரசு பதவி விலகியது.  அதன் பிறகு அமைக்கப்பட்ட முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு  தேர்தலை நடத்தாமல் தாமதித்து வந்தது.  இச்சூழலில் அந்நாட்டின் மதவெறி சக்திகள் தொடர்ந்து சமூகப் பதற்றத்தையும் வன்முறைகளை யும் தூண்டி நாட்டின் அமைதியை குலைத்து வந்தன.  தற்போது பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.