world

img

இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி டோஸ்கள் வழங்க முடிவு.... உலக சுகாதார அமைப்பு தகவல்....

ஜெனீவா:
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ்கள் மாடர்னா கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில் “ உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்றார். முன்னதாக நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால், மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் ஒன்றிய  அரசு பேச்சு நடத்தி வருகிறது. விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.