இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க முடிவு
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் தங்கி இருப்பதாகக் கூறி அந் நாட்டின் இறையாண்மையை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு கண்டனம் எழுந்து வந்த நிலையில் நடைபெற்ற அரபு மற்றும் முஸ்லிம்நாடுகளின் தலைவர்கள் அவசர உச்சிமாநாட்டில் இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவிற்கு போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் மூன்று பேர் பலியாகி யுள்ளனர். இது இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதலாகும். வெனிசுலா ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்நாட்டு ஜனாதி பதி மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதுடன் அவர் தலைக்கு விலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக் ராணுவம்
ஆப்கன் எல்லையில் 31 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற தாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. ஆப்கன் எல்லைப் பகுதியில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் தேடுதல் வேட்டை நடத்தி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதே போல் பிரிவினைவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள கைபர் பக்துன்வா மாகாணம் உள்ளிட்ட அந்நாட்டின் பல பகுதிகளில் பாக் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர் சண்டை நடந்து வருகிறது.