games

img

உலக ஜூனியர் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்இந்திய அணி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில்தென் கொரியா அணியை 44-45, 45-30, 45-33 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்ததுள்ளது.

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி இந்தோனேசியாவை எதிர்கொள்ள உள்ளது.