இஸ்ரேல் ராணுவத்தினர் துன்புறுத்தல் கிரெட்டா தன்பெர்க் குற்றச்சாட்டு
பாலஸ்தீனர்களுக்கான நிவாரணப் பொருட்க ளுடன் சென்ற குளோபல் சுமூத் கப்பல் குழு வில் பயணித்த தன்னார்வ லர்களை இஸ்ரேல் ராணு வம் கைது செய்திருந்தது. இந்நிலையில் தான் உள்ளிட்ட அனைத்து தன் னார்வலர்களையும் இஸ் ரேல் ராணுவ அதிகாரிகள் துன்புறுத்தியதாக சமூக ஆர்வலர் கிரெட்டா தன் பெர்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்த துன்புறுத்தல்களுக்கு பிறகே எங்களை அக்டோபர் 7 அன்று விடுதலை செய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கருத்தை நிராகரித்த பாகிஸ்தான்
இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே மே மாதம் ஏற்பட்ட மோதலின்போது பத்துக்கும் மேற்பட்ட விமானங்க ளை பாகிஸ்தான் இழந்தது என இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்தி ருந்தார். இந்த கருத் தை நிராகரிப்பதாக பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொ டர்பு இயக்குநர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அளித்த பேட்டியில் இந்த மோதலில் சீன ஆயுதங்கள் சிறப்பாகச் செயல்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கதேச மாணவர்களின் கல்வியை பாதுகாக்கும் மிதக்கும் வகுப்பறைகள்
வங்கதேசத்தில் கனமழை காரணமாக ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பள்ளி செல்ல முடியாமல் பாதிக்கப் பட்டுள்ள மாணவர்க ளுக்கு உதவும் வகையில் மிதக்கும் வகுப்பறைகள் செயல்படுகின்றன. வெள்ளத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படு வதால் தன்னார்வ லர் அமைப்பு ஒன்று ஆசிரியர்களின் பங்களிப்புடன் 25க்கும் மேற்பட்ட படகுகளை நடமாடும் வகுப்பறைக ளாக மாற்றி இருக்கிறது. சூரிய ஒளி ஆற்றல் மூலம் படகுகளில் மின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவம் குண்டு வீச்சு: குழந்தைகள் உட்பட 40 பேர் பலி
மியான்மர் ராணுவம் குண்டுவீசியதில் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகொலையாகியுள்ளனர். பௌர்ணமித் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கூடியுள்ளனர். அப்போது ராணு வம் அந்தக் கூட்டத் தின் மீது குண்டுக ளை வீசியுள்ளது. இதில் 80 பேர் படுகாயமடைந் துள்ளனர். 2021 இல் ராணுவம் மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இப்போரினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்தியா-பாக் போர் நான் சொன்னதும் நின்றது – டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணுசக்தி நாடுகள். அவர்கள் சண்டையில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. அவர்களிடம் சரியாக என்ன சொன்னேன் என்பதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர் கள் போரை நிறுத்தி விட்டனர். இதுவும் வரிகளால் தான் நடந்தது. வர்த்தகத்தை வைத்து தான் நிறுத்தினேன். நான் வரிகளின் சக்தியை பயன் படுத்தாவிட்டால் இந்நேரம் 4 போர்கள் நடந்திருக்கும் என டிரம்ப் பேசியுள்ளார்.