சிலி தேர்தல் : அதிதீவிர வலதுசாரிகளின் வெற்றி
சாண்டியாகோ,டிச.15- சிலி ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் 2 சுற்றுத் தேர்தலில் தீவிர வலது சரியான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில், ஜீன்நெட் ஜாரா 26.85 சதவிகித வாக்குக ளுடன் மிகக் குறைந்த வித்தியாசத்தில் முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து காஸ்ட் 23.93 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் 14 அன்று நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இருவரும் போட்டியிட்டனர். மூன்று, நான்கு , மற்றும் ஐந்தாம் இடங்களில் வலதுசாரி, மைய-வலதுசாரி வேட்பாளர்கள் இருந்தனர். இவர்கள் முறையே 19.71, 13.94, மற்றும் 12.47 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் இரண்டாம் சுற்றில் போட்டியிட்ட காஸ்ட்டுக்கு ஆதரவளிக்குமாறு தங்கள் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தனர். இதன் காரணமாக, “கம்பியோ போர் சிலி “ என்ற கூட்டணியைச் சேர்ந்த அதிதீவிர வலதுசாரி வேட்பா ளரான காஸ்ட், சுமார் 58.2 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். “யூனிடாட் பார் சிலி” கூட்டணி யின் ஜீன்நெட் ஜாரா41.8 சதவிகித வாக்குகள் பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் பேசிய ஜாரா தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமது தாய்நாட்டில் மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணி யாற்றுவோம் என வாக்குறுதி கொடுத்த தமது கட்சியின் போராட்டமும் மக்கள் பணியும் தொடரும் என அறிவித்துள்ளார்.
