world

img

“எப்போதும் இல்லாத ஒற்றுமை”

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூலை 5- கரீபியப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் கூட்டமைப்பு(கரீகாம்) தனது 50வது ஆண்டு விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடத் திட்ட மிட்டிருக்கிறது. இந்த அமைப்பில் பஹாமாஸ், ஆண்டி குவா மற்றும் பார்புடா, பெலிஸ், டொமினிசியா, கிரெனடா, கயானா, ஹைதி, ஜமைக்கா, செயின்ட்  லூசியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனாடின்ஸ், சூரினாம், டிரினாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. கூட்டமைப்பு உரு வாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற் றுள்ளதை டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் உச்சி மாநாட்டை யும் நடத்தி கொண்டாடப் போகிறார்கள். கரீகாமின் 45வது உச்சிமாநாட்டில் பெரும் பாலான ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். தொடக்க நிகழ்வின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றுகிறார். அவரது பங்கேற்பு குறித்து பொதுச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கரீபிய நாடுகளின் உறுதியை உலகம் முன்னோடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நிதி அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்த நாடுகளின் செயல்பாடுகள் முன்மாதிரியாக இருக்கின்றன” என்று தெரிவித்தார்.

அவரோடு காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுவா சுன்யாங், அமெரிக்காவின் வெளியுற வுத்துறை அமைச்சர் அன்டோனி பிளின்கள் மற்றும் தென்கொரியாவின் பிரதமர் ஹான் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார் கள். சீனாவின் பங்கேற்பை மிகவும் உன்னிப்பாகக் கரீபிய நாடுகள் மட்டுமில்லாமல், இந்த நாடுக ளுடன் தொடர்புடைய மற்ற நாடுகள் கவனிக் கின்றன என்று ஊடகங்கள் கருத்து தெரி வித்துள்ளன. கரீகாம் அமைப்பின் அடுத்த தலைவராக டொமினிசியா நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கிறார். அவர் கருத்து தெரிவித்தபோது, “ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு மக்கள் தாராளமாக, சுதந்திரமாக நடமாடிக் கொள்வதற்கான ஒப்புதல் தேவைப்படுகிறது. ஒற்றுமைப்படுத்தலை அது உறுதிப்படுத்தும். இதை கரீகாம் பரிசீலிக்க வேண்டும்” என்றார். எப்போதும் இல்லாத ஒற்றுமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் பல தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கரீபிய நாடுகளின் ஒற்றுமையோடு தென் அமெரிக்க  நாடுகளுடன் இணைந்த கூட்டமைப்பும் பலப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கரீகாம் என்ற கரீபிய சமூக அமைப்பு மற்றும் பொதுச் சந்தைக்கான உடன்படிக்கை  1973 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி கையெழுத் தானது. டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள சகுவாரமஸ் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பார்படாஸ், கயானா, ஜமைக்கா,  டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆகஸ்டு 1, 1973 அன்று இது நடைமுறைக்கு வந்தது. பல திருத்தங்களுடனான மேம்படுத்தப்பட்ட உடன்படிக்கை 2001 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. ஒவ்வொரு ஜூலை மாதத்தின் முதல் திங்கட்கிழமையும் கரீகாம் தினமாக அனுரிக்கப்படுகிறது. குறிப்பாக கயானாவில் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாடுகள் கியூபாவுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன. மருத்துவம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8 ஆம் தேதியன்று கரீகாம்-கியூபா தினத்தை அனுசரிக்கிறார்கள். கியூபா விலும் இந்த தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.