world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கனடா பிரதமர், டிரம்ப் மோதல்

 டொனால்டு டிரம்ப் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் மோதல் ஏற்பட்டது. பெரிய நாடுகள் தங்களின் பொ ருளாதார பலத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டி கார்னி பேசினார். இதனை விமர்சிக்கும் வகையில் அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று டிரம்ப் சாடினார். உடனடியாக கனடா அமெரிக்காவால் பிழைக்கவில்லை, கனடா மக்களால் செழிப்பாக இருக்கி றது என கார்னி தெரிவித்தார்.  

ரஷ்ய - அமெரிக்க அதிகாரிகள் அரபு அமீரகத்தில் சந்திப்பு

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீர கத்தில் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளனர். உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் வரைவுத் திட்டம் குறித்து புடினுடன் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. போருக்குப் பின் ரஷ்யாவசம் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவிடமே ஒப்ப டைப்பது, உக்ரைன் படைகளை குறைப்பது குறித்து தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  

மனிதாபிமானம் எங்கே? ஐ.நா கடும் விமர்சனம்

அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வந்துள்ள மக்களின் மீது இனவெறியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  இத்தகைய அத்துமீறல் சம்பவங்கள்  தமக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். பல நேரங்களில் அதிகாரிகள் புலம் பெயர் மக்களின்  “குடும்பங்களைப் பிரித்து விடுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும். கண்ணியம் மற்றும் நமது பொதுவான மனிதாபிமானம் குறித்த கவலை எங்கே போனது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிரம்ப்பின் ‘அமைதி வாரியம்’ தற்போதைக்கு இணையாத இந்தியா'

புதுதில்லி/வாஷிங்டன், ஜன.23- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் உடனடியாக இணைவதை இந்தியா தவிர்த்துள்ளது.  இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, நவம்பர் 2025 இல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் ஒருமனதாக (ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை) அங்கீகரிக்கப்பட்ட டிரம்ப்பின் ‘காசா அமைதித் திட்டத்தின்’ இரண் டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா அவைக்கு மாற்றாக இந்த அமைப்பை டிரம்ப்  தன்னிச்சையாக உருவாக்கி வருகிறார். இந்த வாரியத்தில் உலக நாடுகள் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். அர்ஜெண்டினா, எகிப்து, இஸ்ரேல், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 23 நாடு கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளன.  இந்தியாவையும் (பிரதமர் மோடியை) இந்த வாரியத்தில் இணையுமாறு டிரம்ப் ஏற்கெனவே  அழைப்பு விடுத்திருந்தார். எனினும் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் “அமைதி வாரியம்” சாசன அறிவிப்பு நிகழ்வை இந்தியா தவிர்த்தது.  என்றாலும் அவ்வ ழைப்பை நிராகரிக்கவுமில்லை, ஏற்கவுமில்லை.  இஸ்ரேலுக்கு இடம்;  பாலஸ்தீனம் இல்லை ஐ.நா அவை அமெரிக்காவின் காசா அமை தித் திட்டங்களுக்கு ஆதரவு அளித்திருந்தா லும், இந்த அமைதி வாரிய அமைப்பின் தற்போ தைய கட்டமைப்பு மற்றும் அதிகாரம் அமெ ரிக்காவின் ஆதிக்கத்தால் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டுள்ளது.  அதாவது டிரம்ப் இந்த அமைப்பில்  தன்னைத் தலைவராகவும், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நிர்வாகக் குழுவிலும் நிய மித்துள்ளார். இனப்படுகொலை குற்றவாளி யான நேதன்யாகு இவ்வமைப்பில் சேர்க்கப்படு வதும், பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுவதும் இந்த  அமைப்பின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் அதிகாரம் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டு இருப்பது தெரிகிறது. ஹங்கேரியைத் தவிர பிற ஐரோப்பிய நாடு களும் உடனடியாக இணையவில்லை. ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பி னர்களான ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் இதில் சேரவில்லை.   காத்திருந்து கவனிக்கும் இந்த வாரியத்தில் உடனடியாக இணையா ததற்கு இந்தியாவிடம் காரணங்கள் இருப்பதா கவும், ‘பொறுத்திருந்து கவனிக்கும்’ அணுகு முறையையே அது கடைப்பிடிக்கும். இதில் இணைந்துள்ள நாடுகள், அமைப்பின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் ஆயுட்காலம், ஐ.நா கட்டமைப்புக்கு இது விடுக்கும் சவால், வாரியத்தின் அதிகாரம் மற்றும் இதில் சேராவிட்டால் டிரம்ப்பிடமிருந்து வரக்கூடிய விளைவுகள் என பல்வேறு காரணிகளை இந்தியா ஆய்வு செய்வதாகக் கூறப்படுகிறது.  இருந்தாலும் பாகிஸ்தான் இவ்வமைப்பில் இணைந்திருப்பதால், இந்தியா ஒதுங்கி இருப்பது கடினம் என்றும் அப்படி விலகி இருந்தால், எதிர் காலத்தில் பாகிஸ்தானுடன் மோதல் ஏற்படும் சூழலில், இந்த வாரியம் எடுக்கும் முடிவுகளில் இந்தியாவின் குரல் ஒலிக்காமல் போய்விடும் என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக  காஷ்மீர் விவகா ரத்தை டிரம்ப் இதில் சேர்த்தால் அது இந்தியா விற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும்.  ரப்பர் ஸ்டாம்ப்கள் மூன்று ஆண்டுகளில் டிரம்ப்பின் பத விக்காலம் முடிந்த பிறகு இவ்வமைப்பும் களைந்து விடலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி  சர்வதேசப் பிரச்சனைகளின் போது முறையாக ஆலோசனையின் அடிப்படை யில் முடிவுகள் எடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இவ்வமைப்பில் இல்லை மாறாக டிரம்ப்பின் விருப்பப்படிதான் முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் டிரம்ப்பும் “இந்த வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்வோம்” என்று கூறியுள்ளார்.  தெளிவான விளக்கம் இல்லாமல், இதில் உறுப்பினராகும் நாடுகள் டிரம்ப்பின் தன்னிச்சை யான மற்றும் சட்டவிரோதமான உத்தரவுக ளுக்கு வெறும் ரப்பர் ஸ்டாம்புகளாகவே இருக்க நேரிடும். அதுமட்டுமின்றி ஒரு பில்லியன் டாலர் “கட்டணம்” செலுத்தினால் தான் இவ்வ மைப்பில் “நிரந்தர” உறுப்பினர் தகுதியும் கொடுக்கப்படும்.