world

img

‘ரஷ்யா டுடே’ ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!

நியூயார்க், செப்.5- ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே (RT) மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தி யுள்ளது. 

ரஷ்யா டுடே ஊடகத்தின் செய்தியாளர்க ளான கோஸ்ட்யான்டின் கலாஷ்னிகோவ், எலெனா அஃபனஸ்யேவா ஆகிய இருவரும் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தை (FARA) மீறி சதியில் ஈடுபட்டதாகவும், பண மோசடி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள் ளது. ஆனால் அமெரிக்க அரசுத்தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் சமர்பிக்கப்பட வில்லை.

இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டின் அடிப்படையில்  20-25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என கூறப்படுகிறது. 

மேலும் அமெரிக்க மக்களிடையே மறைமுக மாக ரஷ்யாவிற்கு ஆதரவான பிரச்சாரத்தை இவர்கள் மேற்கொள்வதாகவும், இவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொள்ள 83 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெற்றுள்ளார்கள் எனவும் அமெரிக்க  நீதித்துறை தலைவரான அட்டர்னி ஜெனரல் மெரிக் பி. கார்லண்ட் குற்றம் சாட்டியுள்ளார். மறைமுகமாக ரஷ்யர்க ளுடைய  பிரச்சாரத்தை  முன்னெடுக்க அனு மதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நடை பெறும் உக்ரைன் - ரஷ்யா போரில், உக்ரை னுக்கு ஆதரவாக மட்டும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்யா டுடே ஊடகம் ரஷ்ய தரப்பு நிலைப் பாட்டையும், கருத்தையும் அமெரிக்க மக்களி டையே பேசி வருகிறது. இந்த பிரச்சாரம் அமெ ரிக்காவின் போலிப்பிரச்சாரங்களுக்கு எதிராக உள்ளதாலும், நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அது தாக்கத்தை உருவாக்கும் என்பதாலும் தற்போது இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.

ரஷ்யா டுடே ஊடகத்தின் மீதான இந்தத் தாக்குதல் புதிதல்ல. உக்ரைன்- ரஷ்யா போர் துவங்கியதில் இருந்தே உள்ளது. ரஷ்யா டுடே ஊடகமும் அதன் செய்தியாளர்களும் அமெரிக்கா மட்டுமல்லாது இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளிலும் பல தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.