articles

img

வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் நாட்டின் பொருளாதாரம் - சா.பீட்டர் அல்போன்ஸ்

மக்களின் உணர்வற்ற நிலை

தவளை ஒன்றை கொதிக்கும் நீரில் தூக்கிப் போட்டால் அது உடனே துள்ளி வெளியே குதித்து விடும். ஆனால் குளிர்ந்த நீரில் தூக்கிப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றினால் அந்த தண்ணீ ரிலேயே இருந்து வெந்து செத்துவிடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்போது அந்த வெப்பத்தின் தாக்கத்தை அது உணர்வதில்லை. நம் நாட்டு மக்களும் அந்த தவளையைப்போல் இருக்கிறார்களோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.


அரசின் மக்கள்  விரோத கொள்கைகள்

கடந்த பத்து ஆண்டுகளாக மோடி அரசு பின்பற்றி வரும் மக்கள் விரோத கொள்கைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து சிதைத்து வருவதால், தேசத்தின் பொதுச் சொத்துக்களை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வரை முறையில்லாமல் சுருட்டிக் கொழுக்க அனுமதிப்ப தால், ஜனநாயக நிறுவனங்களை சீரழிப்பதால், இயற்கை வளங்களை தனியார் கொள்ளையிட அனு மதிப்பதால், சாதி-மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்ப தால் நாடு ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டி ருப்பதை மக்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.

ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம்'

நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி, மோடி மயமாக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ கார்ப்ப ரேட் ஊடகங்கள் தொடர்ந்து செய்து வரும் பொய்ப் பிரச்சாரம், கள யதார்த்தங்களை மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைக்கும் கபட விளம்பர யுக்திகள், அனைத்து பிரச்சனைகளையும் மதம் மயமாக்கும் அடையாள அரசியல் போன்ற சதிகளால் சாமானிய மக்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன.

பட்டினி குறியீட்டில்  இந்தியாவின் அவலம்

127 நாடுகளைக் கொண்ட உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா 105 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்து க்கு சென்றுள்ளது. 13.7% மக்கள் ஊட்டச்சத்து குறை பாட்டுடனும், 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் ஆகவும், 18.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களா கவும், 3% குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்னரே இறந்து விடுவதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நிதி ஆயோக்கின்  அதிர்ச்சி தரும் தகவல்கள்

பாஜக அரசின் நிதி ஆயோக் சொல்லும் தகவல்கள் இதைவிட அதிர்ச்சியானவை. வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு 72. பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52. தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61. பாலின சமத்துவத்தில் இந்திய விழுக் காடு 49. குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறி யீட்டில் இந்தியா 68. பொருளாதார நெருக்கடியின் அறிகுறிகள் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் ‘நுகர்தல்’ (consumption) மிகவும் குறைந்து வருகிறது. உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை தேவைக ளுக்கான பொருட்களை சந்தைகளில் அதிகமாக வாங்கி பயன்படுத்தும் இந்த மக்கள் கைகளில் பணப் புழக்கம் இல்லாததால் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தின் சரிவு'

“இந்திய பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் இஞ்சின்” நடுத்தர மக்களே! அவர்களது பொருளா தாரம் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது சேமிப்பு  விகிதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் 50% அதிகமாகியுள்ளது. அதுமட்டு மின்றி அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருப்பதால் நகை மீது வராக் கடனும் 30% அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பின் சரிவு ரூபாயின் மதிப்பு வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் ஒரு டாலரின் மதிப்பு ₹86 ஐ தொடுகிறது. 2013இல் 40-43 ரூபாயாக டாலர் மதிப்பு இருந்த போது அன்றைய பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி சொன்ன வார்த்தைகள் நினைவில் இருக்கிறதா? “டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றால் நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிரதமர் கோழை என்று அர்த்தம். கையால் இயலாத பேடி என்றும் சொல்லவேண்டும். பிரதமரின் திறமை யின்மையே ரூபாயின் மதிப்பு சரிவதற்கான காரணம்” என பேசியவர் தான் மோடி.

நிர்வாகத்தின் முரண்பாடுகள்

“பெற்ற தாய் குலைப்பட்டினி. மகன் கோதானம் கொடுத்தாராம்” என்ற பழமொழி இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. பெற்ற தாய் வீட்டில் பட்டினியால் சாகக்கிடக்கிறாள். மகன் பசு  மாட்டை தானம் கொடுத்தாராம். அமெரிக்க குடியரசுத் தலைவர் பைடனின் மனைவிக்கு பிரதமர் மோடி பரி சாக அளித்த வைர மோதிரத்தின் விலை ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் என்று அமெரிக்க அரசு அறிவித்துள் ளது. உலகின் எந்த நாட்டு தலைவரும் அவ்வளவு விலை உயர்ந்த பரிசை அமெரிக்க குடியரசுத் தலை வருக்கு இதுவரை வழங்கியதில்லையாம்!

தேச பக்தியின் பெயரில் மௌனம்

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்ற மக்கள் உலகிலே மிக அதிகமாக இருக்கும் ஒரு நாட்டின்  பிரதமர் இப்படியெல்லாம் மக்களின் வரிப் பணத்தை செலவிடலாமா என்று நாம் கேட்டால் ‘அவர்கள்’ நம்மை தேசவிரோதிகள் என்று அழைப்பார்கள். நம் மக்க ளைப் போல நாமும் கண்களை மூடிக்கொள்வோம், அவர்கள் பார்வையில் அப்போதுதான் நாம் ‘தேச பக்தர்கள்’. இதுதான் மோடி காணும் ‘புதிய இந்தியா’.

உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில்  127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது  

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விடவும் மோசமான நிலை

ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் நலம்:
 -  13.7% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள்
- 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் 
- 18.7% குழந்தைகள் எடை குறைந்தவர்கள்
- 3% குழந்தைகள் 5 வயதிற்கு முன்பே இறந்து விடுகின்றனர்

நிதி ஆயோக் குறியீடுகள்:
- வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு: 72
 - பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு: 52
 - தரமான கல்வி வழங்குவதில் இந்திய விழுக்காடு: 61
- பாலின சமத்துவத்தில் இந்திய விழுக்காடு: 49
- குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்திய விழுக்காடு: 68

பொருளாதார நிலை:
  - வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் 50% அதிகரிப்பு
  - அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் வராக்கடன் 30% அதிகரிப்பு
  - வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) கடன் வழங்கல் 13.5% குறைவு
  - டாலர் மதிப்பு ₹86 ஆக உயர்வு (2013-ல் ₹40-43 ஆக இருந்தது)
சந்தை நிலவரம்:
  - கார் விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
  - GST வரி வசூல் தொடர்ந்து குறைவு
  - தொழில் மற்றும் வியாபார கடன் கோரிக்கைகள் குறைவு
  - தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் மட்டுமே அதிகரிப்பு