மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் 12 ஆயிரம் கட்டடங்களை இடித்துள்ளது
2009 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 12,000 க்கும் அதிகமான கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளன என ஐ.நா., அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 3,553 விவசாய கட்டமைப்புகள், 3,547 வீடுகள் (தனி அல்லது அடுக்குமாடி கட்டடங்கள்) இடிக்கப்பட்டுள்ளன. போர் துவங்கிய பிறகு 2024 இல் தான் 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமான கட்டடங்களை இஸ்ரேல் இடித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,763 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
வேகமாக பரவும் காட்டுத்தீ : 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பலத்த காற்றின் காரணமாக மிக வேகமாக குடியி ருப்புப் பகுதிகள் வரை பரவியுள்ளது. பெரும் தொழில திபர்களின் வீடுகள் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர புறநகர்ப் பகுதி காட்டுத் தீயால் சூழப்பட்டுள் ளது.இந்நிலையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ள னர். 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகள் காட்டுத் தீயில் அழிந்து விட்டதாக அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலைமை கைமீறி செல்லும் : டிரம்ப் மிரட்டல்
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்கும் ஜனவரி 20 க்கு முன் ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்கா விட்டால் மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவி ரமாகும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். போர் துவங்கிய 50 நாளில் ஹமாஸ் படையை அழித்துவிடுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு கூறி இருந்தார். ஆனால் 1 வருடம் கடந்தும் ஹமாஸ் குழு, இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி சீனா பயணம்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்க ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனா திபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த அவர் இரண்டாவது பயணமாக சீனா செல்வது குறிப்பிடத்தக்கது. சீனா கடந்த ஆண்டுகளில் இலங்கையின் வளர்ச்சிக்காக பல முதலீடுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயணத்தில் இலங்கைக்கான கடன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இரு நாடுகளுக் கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து
வங்கதேசத்தின் இடைக்கால அரசு, முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 97 நபர்களின் பாஸ்போர்ட்களை ரத்து செய்துள் ளது.அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பா யம் ஹசீனா உள்ளிட்ட 11 பேருக்கு கைது வாரண் ட்களை பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 12 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா அவரது விசாவை நீட்டித்துள்ளது.
அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்
நியூயார்க், ஜன.8- அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட டொனால்டு டிரம்ப் செவ்வாயன்று கொடுத்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் எல்லைகளை விரிவுபடுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு மணி நேரம் வரை நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பில், கனடா, டென்மார்க் கின் கிரீன்லாந்து, பனாமா கால்வாய் ஆகிய வற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக இணைப்பது குறித்து பேசியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வென்ற பிறகு பலமுறை எகிப்தின் பனாமா கால்வாய் மற்றும் கனடாவை அமெரிக்காவின் மாநிலங்களாக இணைப்பது பற்றி டிரம்ப் பேசியுள்ளார். தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே கிரீன்லாந்தை தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என பேசியுள்ளார். 1867 இல் அலாஸ்காவையும், 1959 இல் ஹவாயையும் அமெரிக்காவின் மாகாணங்க ளாக இணைத்த பிறகு தற்போது அமெரிக்கா வுடன் பிறநாடுகளின் பகுதியை இணைக்க வேண்டும் என டிரம்ப் பேசி வருகிறார். எகிப்தில் உள்ள பனாமா கால்வாயை 1914 இல் அமெரிக்காதான் கட்டமைத்தது. இந்த கால்வாயை எங்கள் ராணுவத்திற்காக தான் கட்டினோம். அதனை மீண்டும் கைப்பற்றும் காலம் வந்துவிட்டது எனவும் டிரம்ப் குறிப் பிட்டுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார பாது காப்பை தக்கவைக்க இந்த பகுதிகளை அமெ ரிக்காவின் மாநிலங்களாக இணைப்பது அவசி யம் என தனது ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு டிரம்ப் ஒரு காரணத்தையும் சொல்லிக்கொள்கி றார். ஒருவேளை அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் மீது பொ ருளாதாரத் தடைகளை விதிப்பேன் என்றும், தேவைப்பட்டால் ராணுவத்தை கூட பயன் படுத்துவேன் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு நிறுத்தாமல் கிரீன்லாந்து மக்கள் அவர்கள் பகுதியை அமெரிக்காவுடன் இணைக்க வாக்களிக்க வேண்டும் என அந் நாட்டுக்குள் குழப்பத்தை உருவாக்கும் வகை யில் புதிய பிரச்சனையை தூண்டியுள்ளார். கனடா அமெரிக்காவின் 51 ஆவது மாகாண மாக இணைய வாய்ப்பில்லை என டிரம்பின் கருத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ மறுப்பு தெரி வித்துள்ளார்.