world

img

ஆப்கன்-பாக்., அமைதிப் பேச்சு தோல்வி : பதற்றம் அதிகரிப்பு

ஆப்கன்-பாக்., அமைதிப் பேச்சு தோல்வி  : பதற்றம் அதிகரிப்பு 


இஸ்லாமாபாத்,காபூல்,நவ.8-  பாகிஸ்தான் உடன் நடத்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக சனிக்கிழமையன்று (நவ.8) ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.  பாகிஸ்தான் அமைதிக்கு ஒத்துழைக்காமல் பொ றுப்பற்ற முறையில் இருப்பதே இந்த நிலைக்கு காரணம் எனவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி யுள்ளது. இச்சூழலில் இரு நாடுகளுக்கு இடையி லான மோதல் போராக வெடிக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபர் மாதம் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து கத்தாரில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் விளைவாக அக்டோபர் 19 அன்று ஒரு போர்நிறுத்த முன்மொழிவு உருவானது. இதனை இறுதி செய்வதற்காக இரு தரப்பு பிரதிநிதிகள் மற்றும் மத்தியஸ்தம் செய்த கத்தார், எகிப்து பிரதி நிதிகள் நவம்பர் 6 வியாழனன்று துருக்கியில் சந்தித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் கடந்த சில ஆண்டு காலமாக இரு நாட்டுக்கும் இடை யில் உள்ள எல்லைப்பகுதியில் நிலவிவரும் பாது காப்புப் பிரச்சனைகள், பயங்கரவாதத் தாக்குதல் கள்  குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.  தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பா ளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட செய்தி யில் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ் தான் தரப்பு அனைத்துப் பிரச்சனைகளுக்கும்  ஆப்கானிஸ்தான் அரசே காரணம் என குற்றம் சாட்ட முயன்றது. அதே நேரத்தில், ஆப்கா னிஸ்தானின் பாதுகாப்புக்கோ அல்லது அதன் சொந்தப் பாதுகாப்புக்கோ பொறுப்பேற்க எந்த விருப்பமும் காட்டவில்லை. பாகிஸ்தான் தூதுக் குழுவின் பொறுப்பற்ற மற்றும் ஒத்துழைக்காத அணுகுமுறை எந்த முடிவுகளையும் தரவில்லை என்று  குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், பேச்சு வார்த்தைகள் தோல்வியடையும் நிலையில் இருப்பதாக சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஆப்கா னிஸ்தான் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றும் பொறுப்பு ஆப்கானிஸ்தானிடமே உள்ளது என்றும், “இதுவரை அவர்கள் அதில் தோல்வி அடைந்துவிட்டார்கள்” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.  இவ்வாறு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தற்போதைய மோதலுக்கும், பயங்கரவாதத்துக்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதால் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்து வருவதாக கூறப்படுகிறது.