tamilnadu

img

வார்ப்பிரும்பில் என். சங்கரய்யா உருவம் பொறித்த சிறப்புப் பதக்கம்

வார்ப்பிரும்பில் என். சங்கரய்யா உருவம் பொறித்த சிறப்புப் பதக்கம்

கோயம்புத்தூர், நவ. 8 - இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில், ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகை யில், கோவையில் நடைபெற்ற சிஐடியு-வின் 16ஆவது மாநில மாநாட்டில், விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவருமான தோழர் என். சங்க ரய்யாவின் உருவம் பொறித்த வார்ப்பி ரும்பினாலான சிறப்புப் பதக்கம் வெளியிடப்பட்டது. கோவையின் தனித்துவமான தொழில்துறை கைவண்ணத்தில் உரு வான இந்த சிறப்புப் பதக்கம், பிரதி நிதிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பதக்கம் குறித்து, ‘டிசைன் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் நிறுவ னர் சக்திவேல் கூறுகையில், “மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியா கத்தையும், அவர்களின் அர்ப்ப ணிப்பையும் அடுத்த தலைமுறை க்குக் கடத்தும் உயரிய நோக்குடன் இந்தச் சிறப்புப் பதக்கம் உருவாக் கப்பட்டுள்ளது. இது EN-GJL-150 கிரேடு கொண்ட வார்ப்பிரும்பினால் உரு வாக்கப்பட்டு, வெண்கல வண்ணப் பூச்சுடன் (Bronze Finish) மிளிர்கிறது. குறைந்த தர வார்ப்பிரும்பாக இருந்தாலும், இது சிறந்த அதிர்வு உறிஞ்சும் திறன் மற்றும் உயர்ந்த இயந்திரத் திறன் கொண்டது. மெட லின் விட்டம் 98 மிமீ, தடிமன் 8 மிமீ, மற்றும் எடை 300 முதல் 325 கிராம் வரை உள்ளது. இந்த பதக்கம் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 761 பிரதிநிதி களுக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்டது. இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 7 ஆயிரம் ரூபாயாகும். இதன் ஆயுட்காலம் 100 வருடங்களுக்கு மேல் இருக்கும் வகையில் உறுதி செய் ளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். “இதேபோன்று, மாநாட்டு அரங்கிற்கு முன்னால் நிறுவப்பட்ட 26 அடி உயர வார்ப்பிரும்பு கொடிக் கம்பத்தின் அடிப்பாகத்தில் விவசாயத் தோழர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நெற்கதிரின் உருவமும், இரண்டாம் பாகத்தில் கரும்பு விவ சாயிகளை நினைவுகூரும் வகையில் கரும்பின் உருவமும் பொறிக்கப் பட்டுள்ளது. இதன் மொத்த எடை 506 கிலோவாகும்” என்றார்.  தஞ்சை கீழ்வெண்மணி நினைவ கத்தில் 44 அடி உயரத்தில் நிறுவப் பட்டுள்ள 1420 கிலோ SG இரும்பா லான கொடிமரமும் ‘டிசைன் இண் டஸ்ட்ரீஸ்’ நிறுவனர் சக்திவேலின், கைவண்ணத்தில் உருவானதுதான். 2014-இல் நிறுவப்பட்ட இந்தக் கொடிமரம், மிகக் கடுமையான புயலின் போதும் எந்தவித சேதமு மின்றி நிலைத்து நின்றது குறிப்பி டத்தக்கது. முன்னதாக என். சங்கரய்யா உருவம் பொறித்த பதக்கத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் வெளியிட பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். ‘டிசைன் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனர் சக்திவேல் மற்றும் அவரது இணையர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.