states

img

மேற்குவங்கத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

மேற்குவங்கத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தின் தாராகேஷ்வரர் ரயில் நிலையத்தின் அருகே, சாலையோரத்தில் பாட்டியுடன் உறங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
அருகில் உள்ள கால்வாயில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போக்ஸோ வழக்குப் பதிந்து போலீசார் குற்றவாளியை தேடிவருகின்றனர்.