states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தி கேரவன் பத்திரிகை ஆசிரியர் (அரசியல்) ஹர்சோத் பால்

பாஜக தனது வெற்றியையும், ஆதாயங்களையும் எண்ணி பல்வேறு சதிகளில் ஈடுபடுகிறது. பாஜகவின் வெற்றி மற்றும் அதிகாரத்தில் இருக்கும் உரிமை இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா செய்யும் அளவுக்கு வெட்கக்கேடான சூழல் உருவாகியுள்ளது.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாத போதும், அங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காரணம் அந்த நகரங்களின் வாக்காளர்கள் மதம், இனத்தை தாண்டி உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்தினர். இதுதான் பாஜகவின் கனவை கலைக்கும் பயம்.

ஆம் ஆத்மி கட்சி

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஸ்ட்ராங் ரூம்களில் முறைகேடு தொடங்கிவிட்டது. வைசாலி மாவட்டம் ஹாஜிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில், இரவு நேரத்தில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது பீகாரில்?

காங்கிரஸ் கட்சி

மோடியின் தொகுதியான வாரணாசியில், வாக்குத் திருட்டுக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மாணவர்களை கண்டு அஞ்சிய பாஜக அரசு, பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரை கைது செய்திருக்கிறது.