states

கள்ள ஓட்டு தேர்தல் ஆணையம் மழுப்பல்

கள்ள ஓட்டு தேர்தல் ஆணையம் மழுப்பல்

பீகாரில் 121 தொகுதிகளுக்கு நவ., 6ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரி யின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது. இதன் வீடியோ வைர லான நிலையில் இதுகுறித்து ஷாம்பவி சவுத்ரி,”வாக்குச்சாவடி அதிகாரி தவறு தலாக என் வலது கையில் மை பூசி விட்டார்” எனக் கூறினார். மேலும் இது தொடர்பாக பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில்,”இது குறித்து வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப் பட்டது. மை அடையாளம் இடும் பணியில் இருந்த வாக்குச் சாவடி பணியாளர் தவறு தலாக முதலில் வலது கையிலுள்ள விரலில் மை அடையாளம் இட்டார். பின்னர் தலைமை அதிகாரியின் தலை யீட்டின் பேரில் இடது கையிலுள்ள விரலி லும் மை அடையாளம் இடப்பட்டது” என மழுப்பலாகக் கூறப்பட்டுள்ளது.