லாஸ்ஏஞ்சல்ஸ்,ஜன.25- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகா ணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்குப் பகுதியில் உள்ள மலைகளில் புதன்கிழ மையன்று ஒரு புதிய காட்டுத்தீ உருவாகி யுள்ளது. இந்த காட்டுத் தீயை ‘ஹியூஸ் பயர்’ என குறிப்பிடுகின்றனர். கலிபோர்னியாவில் ஏற்கனவே பரவி யுள்ள காட்டுத்தீயின் காரணமாக ஆயிரக் கணக்காக மக்களை அமெரிக்க அரசு வெளி யேற்றியது. தற்போது 50,000 க்கும் மேற் பட்ட மக்களை வெளியேற உத்தரவிட் டுள்ளது. ஜனவரி முதல் வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது வரை பற்றி எரி கின்றது. இந்நிலையில் ஜனவரி 25 முதல் 27 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மழை மற்றும் பனிப் பொழிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப் பட்டுள்ளது. இது ஓரளவு தீயை கட்டுப் படுத்தும் என எதிர்பார்க்கலாம் என கூறப் படுகிறது. எனினும் லட்சக்கணக்கான மரங்கள் எரிந்து போயுள்ள நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவினால் மண் சரிவுகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காட்டுத் தீயின் காரணமாக தற்போது வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பலியான வர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இதுவரை 22 நபர்கள் காணாமல் போயுள்ள னர். 14,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்துள்ளன. 42 மைல் வேகத்தில் வீசும் கற்றால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த காற்றின் வேகம் 60 மைல் ஆக கூட அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.