சென்னை,ஜன.25- சாம்சங் தொழிலாளர்களின் சங்கத்தை நீதிமன்ற உத்தரவின்படி பதிவு செய்ய வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜனவரி 24 அன்று சென்னையில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில பொ துச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளா ளர் மாலதிசிட்டிபாபு உட்பட மாநில நிர்வாகி கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கான சங்கத்தை அமைத்தனர்.இந்த சங்கத்தை சட்டப்படி பதிவு செய்ய தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்தும் பதிவு செய்யாமல் காலங்கடத்துவதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தை துவக்கினர். 37 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் முன்வைத்த போராட்ட துவக்கத்திற்கு முந்தைய நிலை தொடர்வது என்பதை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதும், சங்கப் பதிவு பொறுத்தவரையில் நீதிமன்ற உத்தர வுக்கு கட்டுப்படுவோம் என்று அரசு தரப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்து தொழிலா ளர்கள் வேலைக்கு திரும்பினர். ஆனால் சாம்சங் நிர்வாகம் ஒன்றுபட்ட தொழிலா ளர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி யது, பணியிடத்தில் பாகுபாடு காட்டியது, சங்கத்தை விட்டு நிர்வாகத்தின் ஒர்க்ஸ் கமிட்டியில் சேருபவருக்கு சலுகை என மிரட்டியும், பணிந்தும் மேற்கொண்ட முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொழிற்சங்க பதிவு குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவு கிடைத்த 6 வார காலத்திற்குள் சங்கத்தை பதிவு செய்ய வேண்டுமென்பதாகும். நீதிமன்றத்தின் காலக்கெடு 27.01.2025 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையி லும், தொழிலாளர் துறை, சங்கத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழ் அளிக்கா மல் உள்ளது. இது நீதிமன்ற அவ மதிப்பாகும். தமிழ்நாடு அரசு, இப்பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தொழில மைதியை பராமரிக்கும் வகையில் சாம்சங் சங்கத்தை உடனடியாக பதிவு செய்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.