tamilnadu

img

முதலமைச்சர் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம்

தமிழ்நாடு முதலமைச் சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டா லின் தலைமையில் வியாழக் கிழமை (மார்ச் 13) தலைமைச்  செயலகத்தில், மாநில திட்டக்  குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில  திட்டக் குழுவால் தயாரிக்கப் பட்ட “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்; அரசு தொடக்கப் பள்ளி மாண வர்களிடம் ஏற்படும் தாக்கம் – இறுதி  அறிக்கை”, “பத்து மற்றும் பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை முறைகள் குறித்த ஆய்வு” மற்றும் “சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிய  ஆய்வு” ஆகிய மூன்று ஆய்வறிக்கை களை தமிழ்நாடு முதலமைச்சர் வெளி யிட்டார். இக்கூட்டத்தில், துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சட்டமன்ற உறுப்பினர் நா. எழி லன், மல்லிகா சீனிவாசன், ஜெ. அம லோற்பவநாதன், ஜி. சிவராமன், நர்த்தகி நடராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.