தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் மேல வீதியில் கல்வித் தந்தை சுவாமி சகஜானந்த பிறந்தநாள் விழா ஆர்.எஸ்.எஸ் சார்பில் இன்று (27-01-25) நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிதம்பரத்திற்கு வருகிறார்.
இதனையொட்டி, சுவாமி சகஜானந்தா கொள்கைகளை களவாடும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலின் குரலாக ஒலிக்கும் ஆளுநரை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி சிதம்பரத்தில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.