tamilnadu

img

அரிட்டாபட்டியில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

சென்னை, ஜன.25-  அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். டங்ஸ்டன் திட்ட விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டி மக்கள் நன்றி தெரிவித்து விழா நடத்துகின்றனர். அதற்காக முறைப்படி சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டா லினை சந்தித்து அரிட்டாபட்டி கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சாதி, சமயத்தை மறந்து அனை த்து மக்களும் ஒன்றுகூடி பல போராட்டங்க ளை செய்தோம். இந்த திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கைவிடும் எண்ணத்தை உருவாக்கியதில் முதல மைச்சருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இந்த திட்டம் ரத்து செய்ய முழு காரணமாக இருந்த முதல்வர் ஸ்டாலின்  எங்கள் பகுதிக்கு வர வேண்டும், பாராட்ட வேண்டும் என்று சொன்னோம். வருகிறேன் என்று சொல்லிவிட்டார். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றனர். அரிட்டாபட்டி மக்களின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை (ஜன.26) மதுரை செல்கிறார். குடியரசு தின விழா நிகழ்வுகள் முடிந்த பின்னர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணமாகிறார்.