tamilnadu

போதிய ஊழியர்களை நியமிக்கக் கோரி வங்கி ஊழியர்கள் தர்ணா

சென்னை, ஜன. 25 - வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க தேவையான ஊழியர்க ளை நியமிக்க வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (ஜன.25) சென்னையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.  இந்திய பொதுத்துறை வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 2.11 லட்சம் ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். வங்கிகள் அளிக்கும் சேவைகளின் அளவு பெருமளவு அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு மேம் பட்ட சேவை வழங்க, தேவையான ஊழி யர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக காண்ட்ராக்ட், அப்பரண்டிஸ் முறை நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.

எளிய மக்களிடம் ரூ. 8 ஆயிரம் கோடி அபராதம் வசூல்

பெரு முதலாளிகளின் கடன் கடந்த 10 ஆண்டுகளில் 21 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நேர்மை யாக கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு இந்த தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் எளிய மக்களிடம் 8 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது. எனவே, சாதாரண மக்களி டம் வசூலிக்கப்படும் சேவை கட்ட ணங்களை ரத்து செய்ய வேண்டும். சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி வழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. ஆனால், அரசு வங்கிகள் 3 முதல் 3.5 விழுக்காடு வரை மட்டுமே வட்டி வழங்குகின்றன. இதனால் சேமிப்புகளின் உண்மை மதிப்பு குறை ந்து கொண்டே செல்கிறது. ஆகவே, சிறு வைப்பு வைத்துள்ளவர்களுக்கு (டெபா சிட்தாரர்) வட்டி விகிதத்தை உயர்த்த  வேண்டும், சிறு கடன் பெறுபவர்களுக் கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், நலத்திட்ட வரவுகளில் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு வங்கி உருவாக்கிடுக

மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும், அனைத்து கிராம வங்கிகளையும் ஒருங்கிணைத்து தேசிய கிராம வங்கி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சுனில் குமார் தலைமை வகித்தார். அகில இந்திய செயலாளர் அரிராவ் தொடங்கி வைத்தார். அகில இந்திய செயலாளர் அஸ்வத், மாநில பொதுச்செயலாளர் டி.ரவிக் குமார், நிர்வாகிகள் தேவிகா, சந்திரகுமாரி உள்ளிட்டோர் பேசினர்.