world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

இந்தியாவைச் சேர்ந்த 1.25 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                               *****************

பிரதமரின் வளர்ச்சித் திட்டம் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி., விமர்சித்துள்ளார்.

                               *****************

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

                               *****************

பழனிக்கு வரும்  பக்தர்கள் செல்பி எடுத்து மகிழும் வகையில் பழனிகோவில் நிர்வாகம் சார்பில் ‘‘செல்பிஸ்பாட்” என்ற பகுதி அமைக்கப் பட்டுள்ளது.

                               *****************

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவா்களில் 30 பேரின்உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

                               *****************

பெல்லாரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

                               *****************

பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்துபிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு விலக்கு அளிக்கப்படாது என்று மத்திய சாலைப்போக்குவரத்து-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

                               *****************

நிதிப் பற்றாக்குறையைக் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள் ளார்.

                               *****************

உயர் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ தேர்வுகளைப் போல மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வையும் ஆண்டுக்கு பலமுறை நடத்த மத்தியசுகாதாரத்துறை முடிவு செய்துள்ள தாகக் கூறப்படுகிறது.