அபுஜா
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜிரியாவில் உள்நாட்டு போர் பதற்றம் நீடித்து வருகிறது. காரணம் அந்நாட்டு பிரதமர் முகமது புகாரி சர்ச்சைக்குரிய டுவிட் தான். அதில்,"அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அரசை எதிர்க்க நினைப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்" என மிரட்டும் தோணியில் டுவிட் செய்தார்.
முகமது புகாரியின் இந்த கருத்து உள்நாட்டு கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி சர்ச்சைக்குரிய டுவிட்டை, டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த பிரதமர் முகமது புகாரி நைஜிரிய நாட்டில் டுவிட்டர் இணையதள பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளார். நைஜிரியாவில் டுவிட்டர் தடையை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து நாடுகள் கண்டனம் தெரிவித்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்தியாவிலும் மோடி அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக முட்டு மோதலில் உள்ளது என்பது குறிப்பிடடத்தக்கது.