லெபனான் நாட்டில் வங்கிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். லெபனானில், பணவீக்கம் உயர்ந்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் வங்கிகளிலிருந்து பணத்தைத் திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, வங்கிகளை முற்றுகையிட்டனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி வங்கிகளைக் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மக்கள் வேறு வழியில்லாமல் பணப் பரிமாற்றத்திற்காகக் கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.