world

img

ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் புடின்

மாஸ்கோவ், மார்ச் 18 - ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் புடின். இதன் மூலம் 24 ஆண்டுகள் கடந்து  அந்நாட்டு ஜனாதிபதியாக தொடர்கிறார்.    கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்ற வாக்குப்பதிவில்  புடின்  கிட்டத்தட்ட 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு களை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரி வித்துள்ளன.  

ரஷ்ய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி  50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார். உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் பொருளாதாரத்  தடைகள் மூலம் ரஷ்யாவை முடக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்நாட்டின் வணிகக்  கப்பல்கள், எண்ணெய் நிறுவனங்கள் மீது தொடர்ந்து பொருளா தாரத்  தடைகளை விதித்து வருகின்றன.

எனினும்   தொழில்மயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் தெற்குலக நாடுகள் குறிப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளு டன் ஏற்படுத்தி வரும் ஆக்கப்பூர்வமான பொருளாதார உடன்படிக்கைகள் மூலம் இந்த பொருளாதாரத்  தடைகளை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது.  மேலும் தனது வாங்கும் சக்தியை தக்கவைத்து ஜெர்மனியை விட முன்னேறி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது என அந்நாட்டின் ஸ்புட்னிக் ஊடகம் தெரிவித்துள்ளது.

   அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொடர் தாக்குதல் களை எதிர்கொண்டு வரும் ரஷ்யாவை நேட்டோ  நாடுகள் மூலம் மிரட்டும் வகையில் மிகப்பெரிய போர்ப் பயிற்சியையும் நடத்தி வருகிறது. இந்த போர்ச்  சூழலில் மீண்டும் ரஷ்யாவின்  ஜனாதிபதியாக புடின் மீண்டும் தேர்வாகியுள்ளார். 

உக்ரைனின் தாக்குதல் 
தேர்தல் நாளின் போதும் கூட உக்ரைன் ராணுவம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உட்பட அந்நாட்டின் முக்கிய தலை நகரங்களை நோக்கி 35 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. அந்த தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் முறியடித்துள்ளது.இந்நிலையில் பெல்கோரோட் என்ற நகரத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 16 வயது சிறுமி ஒருவர் கொல்லப் பட்டுள்ளார். அவரது தந்தை படுகாயமடைந்துள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தலையங்கம் 4