கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவில் 11,823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 41,89,153 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,198 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரானா தொற்றுக்கு மேலும் 417 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84,047 ஆக அதிகரித்துள்ளது.