மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மர் நாட்டில் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் உள்ளூர் நேரப்படி காலை 4 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அங்கு வேலைசெய்த 70க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக சுரங்கப்பணிகள் நடைபெற்றதால் அங்கு எவ்வளவு பேர் பணிபுரிந்தனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.
அருகிலிருந்த ஏரியிலிருந்து அடித்துவந்த தண்ணீர் சுரங்கப்பகுதியில் இருந்த கழிவுகளுடன் கலந்து அதில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. காலை 7 மணிமுதல் அந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் 200 மீட்புக்குழுவினர் உடல்களை மீட்க தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் படகுகளை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரியில் இறந்தவர்களை தேடிவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.