world

img

பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்து - 2 பேர் பலி

பிரேசில் நாட்டின் சான்டா கேட்டரினா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ் மாநிலம் கவர்னடார் வாலடேர்ஸ் நகரிலிருந்து சான்டா கேட்டரினா தலைநகர் புளோரியானோபொலிஸ் நகர் நோக்கிச் சென்றது. இடாபோவா நகரின் அருகில் சென்ற நிலையில், விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, விமான நிலையத்தைத் தாண்டி மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஜாயின்வில்லி விமான நிலையத்துடன் விமானி தொடர்பு கொண்டு அவசரமாகத் தரையிறங்க முயன்றது ஏன்? என்பது குறித்து விமானப்படை விசாரித்து வருகிறது.

;