world

img

2 கோடி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிடம் வாங்கும் பிரேசில்....

பிரேசிலியா:
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் இந்த மருந்துகளை டெலிவரி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் 80 லட்சம் டோஸ் மருந்துகள் மார்ச் மாதத்தில்டெலிவரி செய்யப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.