world

img

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,04,414 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,07,112 ஆக அதிகரித்துள்ளது.