world

img

நேதன்யாகு மீதான கைது உத்தரவு : பிரான்ஸ் வரவேற்பு

பாரீஸ், மே 21 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை வழக்கு தொடுத்தது . அந்த வழக்கின் தீர்ப்பாக  இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் மூன்று ஹமாஸ் தலைவர்கள் மீது சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கைது உத்தரவை பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் வரவேற்றுள்ளன. 

காசாவில் குழந்தைகளும் பெண்களும் படுகொலை செய்யப்பட்டதை “ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறிய பிரான்ஸ், சர்வதேச நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்கக் கூடாது என்பதற்கான அதன் சுதந்திரமான செயல்பாட்டையும் வரவேற்பதாக அதன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதேபோல பெல்ஜியமும்  காசாவில் செய்யப்படும் எந்தவொரு குற்றமும் உயர்  மட்ட விசாரணைக்கு  உட்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. நேரடியாக வரவேற்பதாக கூறாமல் இவ்வாறு அந்நாடு தெரிவித்திருந்தது. 

மேலும் பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகளான அல்-ஹக், அல் மெசான், மனித உரிமைகளுக்கான பாலஸ்தீன மையம் ஆகியவை இந்த முடிவு முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளன. மேலும்  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான தீர்ப்பு வழங்கியதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளன.

;