காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று நடத்திய கொடூரமான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தெற்கு காசா நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நிவாரண முகாம்களில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியானதாகவும், தெற்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஏராளமான உடல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நடத்துகிற கொடூர தாக்குதலால் உருக்குலைந்து போயுள்ள காசா நகரத்தில் மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்து வரும் நிலையில்,ஈவு இரக்கமில்லாமல் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.