நியூயார்க்,டிச.6- உலகில் உள்ள 40 பணக்கார நாடுகளில் அறுபத்தொன்பது கோடி குழந்தைகள் அல்லது ஐந்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் வறுமையில் தள்ளப் பட்டுள்ளன என்று ஐ. நா சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதியம் அறிக்கை வெளி யிட்டுள்ளது.
2012 - 2014 மற்றும் 2019 - 2021 வரையி லான காலகட்டத்தில் குழந்தைகளின் வறுமை விகிதங்கள் 8 சதவிகிதம் குறைந்திருந்தாலும், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் பணக்கார நாடுகளில் இன்னும் 69 கோடிக்கும் அதிக மான குழந்தைகள் வறுமையில் தள்ளப் பட்டுள்ளதை இந்த அறிக்கை காட்டுகிறது.
குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் , உடைகள், கல்வி வசதி கள்,அதற்கான பொருட்கள், பாதுகாப்பான தங்குமிடங்கள்/வீடுகள் இல்லை எனவும் இதனால் அந்த குழந்தைகள் இளைஞர்களாக வளரும் போது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது எனவும் ஐ.நா வின் ஆராய்ச்சிப் பிரிவு விளக்கியுள்ளது.
அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் வறுமையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை.
ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் குழந்தை களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க வில்லை என்பதை வலியுறுத்தி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் குழந்தைக ளின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 19.6 சதவிகித (5 லட்சம்) குழந்தைகளும் , பிரான்சில் 10.4 சதவிகித குழந்தைகளும் அமெரிக்காவில் 4இல் ஒரு குழந்தையும் வறுமையில் தள்ளப்பட்ட நிலை உள்ளது.
மேலும் ஒற்றைப் பெற்றோருடன் வாழும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மைப் பின்ன ணியில் உள்ள குழந்தைகள் வறுமையின் தாக்கத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் 30 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தைகளும், 29 சதவீத பூர்வீக அமெரிக்க குழந்தைகளும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர் எனவும் இந்த அறிக்கை காட்டுகிறது.