world

img

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகி உள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தைவான் நாட்டின் யூஜிங்கிலிருந்து கிழக்கே 85 கி.மீ தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பிற்பகல் 12:14 மணியளவில்  ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை
தைவானைப் பொருத்தவரை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படும் என்ற நிலையில் தற்போது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே நேற்று தைவானின் கிழக்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;