world

img

தைவான்: ரயில் தடம் புரண்டு விபத்து - 36 பேர் பலி

தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தைவான் நாட்டில் தாய்டங் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயில் பக்க வாட்டு சுவரில் மோதியபடி சிறிது தூரம் உள்ளே இழுத்து சென்று நின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தடம்புரண்ட ரயிலுக்கு அருகில் லாரியின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லாரி மீது மோதியதால் ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.