world

img

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் சேஞ்ச்-5 விண்கலம்

நிலவிலிருந்து பாறை கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய சேஞ்ச் 5 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

1976ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி  சீனா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலத்தை சுமந்து சென்ற லேண்டர் 7 நாட்கள் பயணித்து நேற்றைய தினம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியில் உள்ள மாதிரிகளை இன்னும் 2 நாட்களில்  விண்கலம் சேகரிக்க தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.