world

img

சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது. 
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பகல் 12.52 மணியளவில்  6.4 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே சுமார் 180 கிமீ (111 மைல்) தொலைவில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் லூடிங் நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 
இதைத்தொடர்ந்து 2 ஆவதாக அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி இருந்தது. 
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாவில்லை.

;