தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், இந்தியர்களுக்கென அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து-கம்போடியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ள பகுதிக்கு உரிமை கோரி இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. பலகட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தனது நாட்டில் உள்ள கம்போடியா தூதரை தாய்லாந்து வெளியேற்றியது. மேலும் தன்னுடைய நாட்டின் தூதரையும் கம்போடியாவில் இருந்து வெளியேறுமாறு தாய்லாந்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கென அவசர உதவி எண் 085592881676 மற்றும் phnompenh@mea.gov.in என்ற மின்அஞ்சல் முகவரியை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.