world

img

மியான்மர் ராணுவ கலகத்திற்கு அதானி உதவினார் நார்வே மத்திய வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு

உலகின் மிகப்பெரிய வங்கி களில் ஒன்றான “நார் ஜெஸ் வங்கி” 1.7 டிரில்லி யன் டாலர்கள் அளவிலான சர்வ தேச முதலீடுகளில் ஆதிக்கம் செய்து வருகிறது. நார்வே நாட் டின் மத்திய வங்கியான நார் ஜெஸ் வங்கி சர்வதேச முதலீடு மட்டுமின்றி தொழிலாளர்களின் ஓய்வூதியப் பணத்தையும் கையாண்டு வருகிறது. 

இந்நிலையில், மியான்மர் நாட்டில் ராணுவ கலகத்தின் போது தனிமனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவத்திற்கு இந்திய நிறுவன மான அதானி குழுமம் உதவிய தாக நார்ஜெஸ் வங்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள் ளது. இதுதொடர்பாக நார்ஜெஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 2022இல் மியான்மர் நாட்டில் நடைபெற்ற ராணுவ கலகத்தின் போது தனிமனித உரி மை மீறல் சம்பவங்கள் மிக மோச மான அளவில் அரங்கேறின.

தனிமனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு மியான்மர் நாட்டு ராணுவத்திற்கு இந்திய நிறு வனமான அதானி நிறுவனம் உதவியது. இதனால் அதானியின் நிறுவனத்தின் நார்வே நாட்டின் முதலீடுகளை திரும்பப் பெறுகி றோம்” எனக் கூறப்பட்டுள்ளது. நார்வே நாட்டு மத்திய வங்கியின் இந்த குற்றச் சாட்டிற்கு அதானி நிறுவனம் இதுவரை எந்த விளக்க மும் அளிக்கவில்லை என்றா லும், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதானியின் திருட்டுத் தனத்தை போட்டுடைத்த நார்வே வங்கி

பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி மியான்மர் நாட்டில் தனது அதானி போர்ட்ஸ் நிறு வனம் சுமார் 150 மில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்திருந்தார். அதானி போர்ட்ஸ் நிறுவ னத்தை சார்ந்து நார்ஜெஸ் வங்கியும் முதலீடு செய்து இருந்தது. திடீரென  2023இல் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை சோலார் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக அதானி நிறுவனம் அறிவித்தது. ஆனால் “சோலார் எனர்ஜி நிறுவனம்” யாருடையது? எதற்கு திடீரென விற்பனை செய்யப்பட்டது? என்பது தொடர்பாக எந்த தகவலையும் அதானி நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் நார்ஜெஸ் வங்கி சார்பில் இது குறித்து அதானி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கப்படவில்லை. அதானியின் திருட்டுத்தனத்தை உணர்ந்து கொண்ட நார்ஜெஸ் வங்கி, மியான்மர் நாட்டில் நடைபெற்ற ராணுவ கலகத்தின் போது தனி மனித உரிமை மீறல் சம்பவங்களில் அதானி நிறுவனம் உதவியதாக தகவல் வெளியான உடன் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் தங்கள் வங்கி சார்பில் மேற்கொள் ளப்பட்டுள்ள அனைத்து முதலீடுகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதானி நிறுவனம் மட்டு மின்றி அணு ஆயுதங்களுக்கான உதிரிபாகங்களை உருவாக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட எல் 3 ஹாரிஸ் மற்றும் வெய்சாய் பவர் (ஆசிய நிறுவனம்) மேலும் இரண்டு நிறுவனங்களின் முதலீடுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது நார்ஜெஸ் வங்கி.

;