world

img

கடந்த 50 ஆண்டுகளில் தடுப்பூசிகளால் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் 1,500 லட்சம் ஹன்னா ரிச்சி

கடந்த 50 ஆண்டுகளில் தடுப்பூசிகள் 15 கோடி குழந்தைகளைக் காப்பாற்றி யுள்ளன. அதாவது 15 கோடி குழந்தைகள் வளர்ந்து, வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இந்த உலகிற்கு  சிறந்த பங்களிப்பை செலுத்துவார்கள். 

இதை மற்றொரு விதத்தில் கூறுவதென்றால் 10 கோடிக்கும் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தை களை அடக்கம் செய்ய வேண்டிய சோகத்தி லிருந்து மீண்டெழுந்துள்ளனர். தட்டம்மைக்கு எதி ரான தடுப்பூசி உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கடந்த  50 ஆண்டுகளில் 9.4 கோடி உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 

1974-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை உலகளவில் தடுப்பூசிகளால் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை. (லட்சத்தில்)

தட்டம்மை  - 937 /  டெட்டனஸ் - 279.5
சுவாசக்குழாய் தொற்று (Pertussis) - 131.700
காசநோய் - 108.7
ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா     
(வகை பி) - 28.5
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (நிமோனியா) - 16.300
போலியோ - 15.700 /  மஞ்சள் காய்ச்சல் - 5.5
ஹெபடிடிஸ் பி (மஞ்சள் காமாலை)  - 4.600
ரோட்டா வைரஸ் (குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு) - 4
டிஃப்தீரியா (மூக்கு- தொண்டையில் ஏற்படும் தீவிரமான தொற்று) - 3.600 
ரூபெல்லா (ஜெர்மன் தட்டம்மை) - 2.9
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 29,000
நைஜிரியா மெனிங்கிடிடிஸ் ஏ  (மெனிங்கோ கோகல்) (அறிகுறியின்றி மூக்கு-தொண்டையின்  பின்பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்கள்)- 2,000

இது உண்மையிலேயே உலகளாவிய முயற்சியாகும். ஆப்பிரிக்காவில் 5கோடிக்கும் அதிகமான  குழந்தைகள், தென்கிழக்கு ஆசியாவில்  (இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ்)  3.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட ஒவ்வொரு உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் 50 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். 

மூன்றில் இரண்டு பங்கு  இறப்பு குறைப்பு

தட்டம்மை, கக்குவான் இருமல், டெட்டனஸ், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசி யின் விளைவாக விலை மதிப்பில்லாத லட்சக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

தடுப்பூசி  குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்ப தில் பங்களிப்பைச் செலுத்துகிறது. அனைத்து வயது குழந்தைகளும் விரிவான நோய்த்தடுப்பு திட்டங்களின் மூலம் பெருமளவில் பயனடைந்துள் ளனர். இதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

உலகளவில், 1974-ஆம் ஆண்டு  10 சதவீத மாக இருந்த இறப்பு விகிதம்  சுமார்  மூன்று சதவீதம் குறைந்துள்ளது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது. இறப்பைக் குறைப்பதில் தடுப்பூசிகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இறப்பைக் குறைப்பதில் 60 சதவீதம் தரமான மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து, மகப்பேறு-குழந்தை பராமரிப்பில் தனிக்கவனம், பிறந்த குழந்தைகளை பராமரிப்பதில் கூடுதல் அக்கறை, சுத்தமான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை முக்கியக் காரணிகளாக உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டங்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. 50 ஆண்டு களுக்கு முன்பு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா விற்கு வெளியே மிகச் சில குழந்தைகளுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஐந்து சதவீதத்திற்கும் குறைவான குழந்தை களுக்கு டிஃப்தீரியா, பெர்டுசிஸ் (சுவாசக்குழாய் தொற்று) மற்றும் டெட்டனஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்துள்ளது.

இதையடுத்து 1974-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், உலகம் முழுவதும் தடுப்பூசி கள் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தி ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டங்களை உருவாக்கியது. இதன் மூலம் உலகளவில்  தட்டம்மை, டெட்டனஸ், காசநோய் மற்றும் பெரி யம்மை போன்றவற்றுக்கு எதிராக 60 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டது. இதன் மூலம் இறப்பு விகிதம் செங்குத்தாகசரிந்தது.

தடுப்பூசிக் கூட்டணி
இருப்பினும் 2000-ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் செலுத்துவதில் குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் தடை ஏற்பட்டது.  இந்தத் தடையை உடைத்தெறிய  GAVI, தடுப்பூசி கூட்டணி உருவாக்கப்பட்டது. GAVI தடுப்பூசி கூட்டணி என்பது பொது-தனியார்  உள்ளடக்கிய  உலகளாவிய சுகாதார கூட்டமைப்பாகும்.  

GAVI, தடுப்பூசி கூட்டணியின் நோக்கம் தடுப்பூசி  கிடைப்பதை விரைவுபடுத்துவது, நாடுகளின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது,  புதிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப த்தை அறிமுகப்படுத்துவதாகும். இந்தக் கூட்டணி 55 லட்சம் குழந்தைகள் இறப்பதை தடுத்துள்ளது. 

GAVI கூட்டணியில் நான்கு நிரந்தர உறுப்பி னர்கள் உள்ளனர். இதில் ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி, மற்றொரு பிரதிநிதியாக யுனிசெப் உள்ளது. 

உலகளவில் தட்டம்மைக்கு எதிரான  தடுப்பூசி 2000- ஆம் ஆண்டில் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து இன்று 70 சதவீதம் அதிகரித்துள் ளது . தட்டம்மைக்கு எதிரான தடுப்பூசி பல லட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றால் அது மிகையல்ல.

தவிர 84 சதவீதக் குழந்தைகளுக்கு காச நோய்க்கு எதிராகவும், 80 சதவீதம் குழந்தை களுக்கு போலியோ மற்றும் ஹெபடிடிஸ்-பி- க்கு எதிராகவும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காசநோயால் இறக்கின்றனர். மூளைக்காய்ச்சல் மற்றும் கக்குவான் இருமல் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கானோர் பலியா கின்றனர். தட்டம்மை, டெட்டனஸ் மற்றும் ஹெபடிடிஸ் -பி ஆகியவற்றால் சில ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த ஆய்வு, நாம் ஏன்  தொடர்ந்து தடுப்பூசி போட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. தட்டம்மைக்கு எதிராக மட்டுமல்ல, எல்லா நோய்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி செலுத்துவதில் அபரிமிதமான முன்னேற்றம் இருந்தபோதிலும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.  தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது.

(வாசகர்கள் இந்தச் செய்தியை படித்து முடிப்பதற்குள், தடுப்பூசிகளால் சுமார் 30 குழந்தை கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.) முழுமையான தகவல்களை படிக்க  https://ourworldindata.org/vaccines-children-saved என இணையதளத்தை அணுகலாம்.

;