world

img

இஸ்ரேல் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது

அங்காரா, மே 30- தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐ.நா அமைப்பை கடுமையாக விமர் சித்துள்ளார் துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன். இஸ்ரேல் பாலஸ் தீனர்களுக்கு மட்டு மல்ல ஒட்டு மொத்த மனித குலத்துக்கே விரோதமான நாடு என கடுமையாக சாடியுள்ளார்.மேலும் ஐநா அவையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐ.நா. மீதும் புகார் ஐ.நா அவையின் ஆன்மா காசாவில் இறந்துவிட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென நீங்கள் காத்துக் கொண்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், இஸ்லாமிய நாடுகளுக்கு  நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ஒரு பொதுவான முடிவை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்ய வேண்டும் ? இஸ்ரேல் காசாவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என அவர் கூறியுள்ளார். காசா மீதான தாக்குதலை நிறுத்த உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் எகிப்து காசா எல்லையான ரஃபாவில்  இஸ்ரேல் ராணுவம் கொடூரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

;