world

img

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் மரணம்

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரோரி லெபனானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார்.

ஹமாஸின் சக்திவாய்ந்த தலைவரான அரோரி, இஸ்ரேலின் உளவுப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என ஹமாஸ் அமைப்பு தகவல்.

ஹமாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் - அரூரி உட்பட 5 பேர் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

லெபனான்- பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அல் - அரூரி கொல்லப்பட்டார். ஆளில்லா விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹமாஸின் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியை (Izz ad-Din al-Qassam Brigades) உருவாக்கியவர்களில் அரூரியும் ஒருவராவார்.

பெய்ரூட் புறநகர்ப் பகுதியான அல்-முஷ்ரிஃபிய்யிலுள்ள ஹமாஸுக்குச் சொந்தமான அலுவலகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.