world

img

8 அப்பாவிகள் படுகொலை தொடரும் இஸ்ரேலின் அட்டூழியம்

டெல் அவிவ், ஜூலை 4- பாலஸ்தீனத்தின் ஜெனின் பகுதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வெறித்தனமான தாக்குதல்களில் எட்டு அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதியில் ஏராளமான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்தப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் பெரும் தாக்குதல்களை நடத்தி மக்களை அச்சுறுத்தி அவர்களை அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறச் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஜெனின் நகரில் உள்ள முகாம் ஒன்றிற்குள் புகுந்து  தாக்குதல் நடத்தினார்கள். தற்போது மீண்டும்  இதே நகரத்தில் நடுஇரவில் தொடங்கி, கிட்டத் தட்ட ஒரு நாள் முழுவதும் தாக்கியிருக்கிறார்கள். இந்தக் கொலைவெறித் தாக்குதல்களைப் பாலஸ்தீனத்தின் சுகாதாரத்துறை உறுதி செய்திருக்கிறது. பல மணிநேரங்கள் நடந்த  இந்தத் தாக்குதல்களில் எட்டுப் பேர் கொலை  செய்யப்பட்டதோடு, மேலும் பலர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தத் தாக்குதல்கள் வான்வழியில் போர் விமானங்கள் மூலமும், தரைப்படையினர் மூலமும் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. இந்தத் திடீர்த் தாக்குதல்களுக்கான காரணங்கள் எதுவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.  இஸ்ரேல் தரப்பில் காரணங்கள் சொல்லப் பட்டாலும் அவை பொருத்தமானதாக இருப்ப தில்லை என்று பல நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களை அப்புறப்படுத்திவிட்டு இஸ்ரேலியர்களை குடியேற்றம் செய்யும் சட்ட விரோதப் பணிகள் தொடர்கின்றன. சர்வதேச சமூகத்தின் குரல் மட்டுமே இஸ்ரேலின் இந்த மனித குல விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஐ.நா.சபையின் மத்திய ஆசியாவுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லாண்டு, “தற்போது பரவியுள்ள வன்முறை நடவடிக்கைகள் பெரும் ஆபத்தானது. தாக்குதல்கள் நடந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதை அனைத்துத் தரப்பினரும் உத்தரவாதப்படுத்த வேண்டும்” என்றார். ஐ.நா.வின் மற்றொரு உயர் அதிகாரியான லின் ஹேஸ்டிங்ஸ், “காய மடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார். அரபு லீக்கும் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

பல நாடுகள் கடும் எதிர்ப்பு

இஸ்ரேலின் இந்த அத்துமீறலைத் தாங்கள்  கடுமையாகக் கண்டிப்பதாக எகிப்து வெளி யுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறு கிறது. இது குறித்து அந்த அறிக்கையில், “சர்வ தேசச் சட்டங்களை அப்பட்டமாக இஸ்ரேல் மீறி யுள்ளது. இந்தக் கொலைகள் பாலஸ்தீனத்தின் மீது மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.  பாலஸ்தீனப் பகுதிகளுக்கு நுழைந்திருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும்.  வன்முறை நிகழ்வுகள் அதிகரிக்கும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.   ஜோர்டான், துர்க்கியே, லெபனான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிடமிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இஸ்ரேலின் இந்த சட்டவிரோத ராணுவ நட வடிக்கைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும், பொதுப்புத்தி யோடு இஸ்ரேல் நடந்து கொண்டு தாக்குதல் களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்  இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆக்கிர மிப்பாளர்கள் மீது சர்வதேச சமூகம் தேவையான அழுத்தத்தைப் போட்டு பாதுகாப்பற்ற பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று  லெபனானின் வெளியுறவுத்துறை வலியுறுத்தி யிருக்கிறது.