world

img

இலங்கை தமிழர்களுக்கு தோட்டனூத்தில் 321 தொகுப்பு வீடுகள்

திண்டுக்கல், செப்.14- திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சியில் தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கி ணைத்து 17 கோடியே 84 இலட்சத்து 48 ஆயி ரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி களை செப்டம்பர் 14 புதனன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீ ரைத் துடைக்கக்கூடிய வகையில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  முகாம் வாழ் இலங்கைத் தமி ழர்கள் நலன்காக்க 27.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளி யிட்டார்.  “கடந்த சில ஆண்டுகளாக முறை யான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரக்கூடிய முகாம்வாழ் இலங்கைத் தமிழர் களுக்கு, பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உறுதிசெய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன். இதற்காக, அவர்கள் தங்கியிருக் கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, அந்த ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதிதாகக் கட்டித்தரப்படும்” என்று  முதலமைச்சர் அறிவித்தார். 

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து மற்றும்  கோபால்பட்டி முகாம்களை ஒருங்கி ணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய புதிய முகாமினை அமைக்க ஏதுவாக தோட்ட னூத்து கிராமத்தில் 3.05 ஹெக்டேர் நிலம் மற்றும்  நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்டது.  அதன் தொடர்ச்சியாக, தோட்ட னூத்து ஊராட்சியில் புதிதாக ஒருங்கி ணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு 15 கோடியே 88 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 300 சதுரஅடி பரப்பளவில் 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இம்முகாமில் 1 கோடியே 62 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம், தார்ச்சாலை, சிமெண்ட் சாலை, ஆழ்குழாய், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, புதிய மின் கம்பங்கள், 78 தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், 33 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறைகள் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு ஆகியன அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் பணி களும் எட்டு மாதங்களில் செய்து முடிக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து  கூட்டுறவுத் துறை  அமைச்சர் .இ.பெரியசாமி,  உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  அர. சக்கரபாணி,  சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், நாடாளு மன்ற உறுப்பினர்   ப. வேலுச்சாமி, சட்ட மன்ற உறுப்பினர்கள் .இ.பெ. செந்தில் குமார், ச. காந்திராஜன், திண்டுக்கல் மாநக ராட்சி மேயர்  இளமதி ஜோதி பிரகாஷ்,  அயலகத் தமிழர் நலன் -மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்  ச.விசாகன்,  மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர். மேலும், முகாம் அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,  பொதுத்துறை செயலாளர்  டி. ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

;