ரஷ்ய எண்ணெய் நிறுவனங் கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் இந்தியாவை படிப் படியாக பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன. உக்ரைன் - ரஷ்ய போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்ததை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய நாடுகள் புதிய தடைகளை விதித் துள்ளன. குறிப்பாக சோவ்கம்பிளாட் என்ற ரஷ்ய அரசுக்கு சொந்தமான மிகப் பெரும் வணிகக் கப்பல் நிறுவனத்தின் மீதும் அதன் வணிகக் கப்பல்கள் மீதும் தடைகளை அதிகரித்துள்ளன. இதுவரை 50 க்கும் மேற்பட்ட ரஷ்யக் கப்பல்களை இந்தத் தடைகள் மூலம் பொருளாதார போக்குவரத்தில் இருந்து அமெரிக்கா முடக்கியுள்ளது. உக்ரைன்- ரஷ்ய போர் துவங்கிய பின் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, ரஷ்யாவின் குறைந்த விலை கச்சா எண்ணெய்யால் அதிக பயனடைந்த நாடாக இந்தியா மாறியது. 2023 ஆம் ஆண்டு மட்டும் 68 கண்டெய்னர் கப்பல்களில் ( 4.8 கோடி பேரல்) எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. எனினும் வணிகக் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க துவங்கிய பிறகு தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களின் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய்களை இந்தியா ஏற்றுக்கொள்வதில்லை. இந்நிலையில் தடைகளை எதிர்கொள்ளாத நிறுவ னத்தின் கப்பல் மூலம் கச்சா எண்ணெய் இந்தியா நோக்கி வரும்போது அமெரிக்கா முன்னறிவிப் பில்லாமல் தடைகளைப் போடு கிறது. இந்த கப்பல்களை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த கப்பல்க ளில் உள்ள எண்ணெய்யை கட்டாய மான முறையில் நிராகரிக்கும் சூழல் உருவாகிறது. 2023 டிசம்பர் மாதம் முன்னறிவிப் பில்லாமல் போடப்பட்ட தடைகளால் 2024 ஜனவரி மாதம் வரை சன் ஷிப் மற்றும் ஹென்னெச டேங்கர்ஸ் கப்பல் நிறுவனங்களின் 10 கப்பல்களை இந்தியா நிராகரிக்க வேண்டிய சூழல் உருவாகியது.இதனால் பல லட்சம் லிட்டர் குறைந்த விலை கச்சா எண் ணெய் இந்தியாவின் கையை விட்டுச் சென்றது. இது வரக்கூடிய நாட்களில் இந்தியாவின் எண்ணெய் இருப்பை பாதிக்கலாம் என கூறப்படுகிறது. போரின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு மேலும் சில தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது விதித்துள்ளன. அதில் சோவ் கம்பிளாட்,என்.எஸ். லீடர் ஷிப்பிங், எஸ்.பி.எப் என்ற துபாய் நிறுவனம் ஆகியவற்றின் 20 கப்பல்களும் அடங்கும்.