world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பொதுத்துறைகளை தனியாருக்கு கொடுக்கும் பாகிஸ்தான் அரசு

அரசுக்குச் சொந்தமான அனைத்து பொ துத்துறை நிறுவனங்களையும் தனி யார்மயமாக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத் துள்ளது. முதல் கட்டமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்பனை செய்யப் போவ தாகக்  கூறி பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை தனி யார்மயமாக்குவதாக மே 14 அன்று  அறிவித்துள் ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் கடன் வாங்கிய பிறகு இந்த தனியார்மயமாக்கல்  முடி வுகளை பாக் அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குட்டிக்கரணம் அடித்து  மக்களை ஏமாற்றும் அமெரிக்கா

இஸ்ரேல் ராணுவம் ரஃபா மீது தாக்குதலை துவங்கியுள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதங்க ளை அனுப்ப மாட்டோம் என்று மே 8 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தயாராகியுள்ளதாக  மே 15 அன்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு தேவையான அனைத்து வகை ஆயுதங்களையும் அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மசாலாக்கள் மீது  இங்கிலாந்தில் கட்டுப்பாடு  அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் மசாலாப்பொருட்கள் மீது கூடுதல் கட்டுப்பாட்டை இங்கிலாந்து உணவு கண்காணிப்பு குழு அமல்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிரபலமான  எவரெஸ்ட் உள்ளிட்ட மசாலாப்பொருட்கள் உற்பத்தி நிறுவன பொருட்களில் சில ரசாயனங்களின் அளவு  அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்ததால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடா காட்டுத் தீ  தீவிரம் குறைகிறது

கனடாவில்  ஏற்பட்ட காட்டுத்தீ யின் தீவிரம் குறைவதாகக் கூறப்பட்டுள்ளது. கனடாவில் ஏற் பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளி யேற்றப்பட்டனர். காட்டுதீயினால் ஏற்பட்ட புகை காற்றில் அமெரிக்கா வரை சென்று கனடா அமெரிக்க எல்லையோரப் பகுதிக ளில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

ஸ்லோவேகியா பிரதமருக்கு  நினைவு திரும்பியது

அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டு படுகாயமடைந்த ஸ்லோவேகியா பிரதமர் ராபர்ட் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார் எனவும் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது எனவும் அந்நாட்டு சுற்றுச்சூழல்  துறை அமைச்சர் தராபா தெரிவித்துள்ளார். தாக்குதலின் போது தலைப்பகுதியில் படுகாயம்  ஏற்பட்டதால் அவர் சுய நினைவை இழந்திருந்தார்.